கும்பகோணம், அக். 01 –

கும்பகோணத்தில் இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு  பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மேலும் மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்தியா முழுவதும் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் இயங்கி வரும் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, மற்றும் அமலாக்கத் துறை இணைந்து கடந்த 22-ஆம் தேதி சோதனைகளை நடத்தின.

இச் சோதனையின் முடிவில் அந்த அமைப்பைச் சோந்த 106 பர் கைது செய்யப்பட்டனா். மேலும், பல்வேறு மாநிலங்களில் கடந்த 27 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், பிஎஃப்ஐ அமைப்பை சட்ட விரோத இயக்கமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், பிஎஃப்ஐ அமைப்புக்கு தொடர்புடைய 8 அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜான் செல்வராஜ் நகரில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகத்திற்கு கோட்டாட்சியர் லதா தலைமையில் இன்று சீல் வைத்தனர். இதில் வட்டாட்சியர் தங்க பிரபாகரன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் மற்றும் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here