தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னனு வாக்குபதிவு எந்திரங்கள் வைப்பறைகள் (strong Room) வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி. மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. 1710 வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவு நடைப்பெற்றது.
பதிவான மின்னனு வாக்குப் பதிவு எந்திரங்கள் தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, தனி தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
மின்னனு வாக்குப் பதிவு எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த வைப்பறையை (strong Room) தேர்தல் பொது பார்வையாளர், மாவட்ட ஆட்சியர், வேட்பாளர்களின் தலைமை முகவர்கள் சரி பார்த்தனர். பின்னர் அறையின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு கதவு மூடி பூட்டப்பட்டது. தொடர்ந்து வேட்பாளர்களின் தலைமை முகவர்கள் முன்னிலையில் வைப்பறை சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்டஅறை முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு வீரர்கள். பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.