ஊத்துக்கோட்டை, மார்ச். 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி..

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் பணியாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உப கரணங்கள் வழங்கப்படாமல் அவர்களை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பினை நீக்குவதற்கு அந்நிர்வாகம் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் எழுப்பும் புகார். மேலும் எவ்வித எந்திரங்களையும் பயன்படுத்தாமலும்,, தூய்மைப் பணியார்களுக்கு கையுறை, முகவுறை, மற்றும் காலணிகள் உள்ளிட்ட எவ்வித உரிய பாதுகாப்பு சீருடைகள் எதுவும் வழங்கப் படாமல் அவர்களை வெறும் கையுடன் பணியாற்ற வைத்து வருகிறது. அத்தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகம்.

காலங்கள் மாறி வரும் இந்த நூற்றாண்டில் இன்னும் மனிதக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் செல்லும் கழிவுநீர் கால்வாய்களை தூய்மைப் படுத்த மனிதர்களை பயன்படுத்துவது மட்டுமல்லாமல் குறைந்தப் பட்சம் அவர்களும் மனிதர்கள் என்ற நினைவோடவாது அவர்களுக்கு தொழில் ரீதியாக அவர்களின் உயிர் மற்றும் தேகப் பாதுகாப்பை உறுதிப்படுத்திடும் வகையில் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டாமா ?

ஆனால் அரசு மற்றும் மனித உரிமை ஆணையம் உள்ளிட்டவைகள் கூறியுள்ள விதிமுறைகளை மதித்திடாமல் ஊத்துக்கோட்டை தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகம் அத்தூய்மை பணியாளர்களை ஈடுப்படுத்தி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியதும் அவமானத்துக் குரிய செயலாகும் என அப்பகுதி வாழ் கல்வியாளர்கள்,சமுக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் வருத்தை தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்ட நகர உள்ளாட்சி ஆணையம் அவர்கள் எழுப்பும் புகார் குறித்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஊத்துக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 15 வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய்கள் மண்ணால் மூடப்பட்டு ஆங்காங்கே கழிவுநீர் வெளியேற முடியாமல் கழிவுநீர் வடிநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலை அப்படியே தொடருமானல் பல்வேறு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் ஆங்காங்கே வெட்ட வெளிகளில் தேங்கி நிற்கும் கழிவு நீர்களில் நோய் தொற்றை ஏற்படுத்தும் கொசு உள்ளிட்ட பல்வறு வகையான புழுக்கள் அதில் தென்படுகின்றன எனவும் அதனை அழித்திட கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப் பட வேண்டும் என உள்ளூர் தேர்வுநிலை பேரூராட்சி செயலருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று நாகலாபுரம்  9 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள காவலர்கள் குடியிருப்பு  பகுதியில் மாதக் கணக்கில் கால்வாய் தேங்கிய அடைப்புகளை சுத்தம் செய்யும் போதும் தூய்மை பணியாளர்கள் முகவுறை, கையுறை உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அவர்கள் அத்தூய்மை பணியில்

பேரூராட்சி அதிகாரிகள், மற்றும் வார்டு உறுப்பினர் முன்னிலையில் அவர்கள் பணியில் ஈடுப்பட்டு வருவது கொடுமையிலும் கொடுமை என்கின்றனர் அக் காட்சியினைக் காண்போர். மேலும் வெகு நாட்கள் தேங்கிவுள்ள கழிவுநீர் கால்வாய்களில் முகவுறை இல்லாமல் பணி செய்வதால் விஷவாய்வு தாக்கும் அபாயமும் உள்ளது என்பதும் குறிப்பிட தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here