திருவள்ளூர், பிப். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ….

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5 கி.மீ தூரத்திற்கு 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க ஏற்கனவே சாலை அமைத்துள்ள நிலையில் இந்த துறைமுகங்களை ஆந்திர மாநிலத்துடன் இணைப்பதற்காக சுமார் ரூ. 3200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தச்சூர் – சித்தூர் 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சார்பில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஊத்துக்கோட்டை அருகே வடமதுரை, தும்பாக்கம் ஆகிய ஊராட்சிகளுக்குட்ப்பட்ட ஆரணி ஆற்றில் தச்சூர் – சித்தூர் சாலை பணிகளுக்காக என கூறி சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மணல் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் 100 க்கும் மேற்பட்ட லாரிகளில் தினசரி பகலிரவு என தொடர்ந்து மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி வாழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கும் போது, ஆறு வழிச்சாலை அமைத்திடும் பணிகளுக்காக மாவட்ட பொதுப்பணித்துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ  ஒப்பந்ததாரர்களுக்கு ஆற்று மணல் அள்ளி அப்பணிகளுக்கு பயன் படுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளதா ? மேலும் எத்தனை யூனிட் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவும் அதற்காக அவர்கள் அரசுக்கு பணப் பரிவர்த்தனை செய்துள்ளார்களா ? அளவிட முடியாத அளவிலும் சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் இரவு பகலாக மிகப்பெரிய அளவிலான இயந்திரங்கள் கொண்டு, அவர்கள் மணலை அள்ளுவதை கண்காணிக்க ஏன் அரசு சார்பிலான அலுவலர்களை அரசு நியமிக்கவில்லை என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.

மேலும் அப்பிரச்சினைக் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் சுமார் ரூ. 3200 கோடி மதிப்பீட்டிலான திட்டத்திற்காக மக்கள் வரிப் பணத்தை  ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிடும் அரசு,  அப் பணிகளுக்காக ஆற்று மணலை கணக்கு வழக்கில்லாமல் அள்ளும் அவர்களிடமிருந்து பொதுப்பணித்துறை மாவட்ட நிர்வாகம் பணம் வசூல் செய்கிறதா ஏன் அந்த இடத்தில் அக் குத்தைக்கான நபர்களின் பெயரோ மணல் அளவீடுக் குறித்த வாசகம் நிறைந்த விளம்பர பலகை அங்கு வைக்கப்படவில்லை எனபது போன்ற பல்வேறு கேள்ளவிகளை அவர்கள் எழுப்புவதோடு பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகின்றனர்.

உள்ள படியே அவர்கள் கூறியபடி இது சட்டத்துக்கு விரோதமான செயல் என்றால் அச்செயலில் ஈடுப்படும் கனிமக் கொள்ளையர்கள் மீது பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு வலியுறுத்துகின்றனர்.

பேட்டி அப்பகுதி வாழ் விவசாயி குப்பையா …

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here