மயிலாடுதுறை, பிப். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …

மயிலாடுதுறை மாவட்டம், பாண்டூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சப்தகன்னி ஆலயத்தின் மாசி மக பெரு விழா இன்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு, திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிச் சுமந்து வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.

அதற்காக தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் மற்றும் சாவடிகளை சுமந்தவாறு காவிரி ஆற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு முன்னதாக மேள வாத்தியங்களுடன் காளி ஆட்டம் சென்றது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு‌ வழி நெடுவிலும்  பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு சப்தகன்னி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அவ்விழாவில் மேலும் திராளனப் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து உளம் நிறைவுப்பெற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here