புதுச்சேரி, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி யூனியன் பிரதேசம், விழுப்புரம் நெடுஞ்சாலை மூலகுளம் சந்திப்பில் முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான கேஸ் ஏஜென்சி அலுவலகம் உள்ளது. மேலும் அதே சாலையில் ரத்தனா ஸ்டோர்ஸ் என்கிற பாத்திர கடை அமைந்துள்ளது,
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் அவ்விரண்டு கடைகளின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே சென்று கேஸ் ஏஜென்சியில் ரூ. 9 லட்சமும், பாத்திர கடையில் ரூ. 80 ஆயிரமும் திருடி சென்றுள்ளர்.
அக் கொள்ளைக் குறித்து அவ்விரு கடைகளின் உரிமையாளர்கள் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாத்திர கடை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கடைக்குள் புகுந்து ஒரு வாலிபர் திருடுவதும் அதே போல் கருப்பு நிற காரில் மூன்று பேர் தப்பி செல்வதும் அதில் பதிவாகி இருந்தது.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் தொடர்ச்சியாக ஆய்வு செய்து அந்த காட்சிகளை தமிழக போலீசாரிடமும் பகிர்ந்த போது புதுச்சேரிக்கு காரில் வந்து கொள்ளை சம்பத்தில் ஈடுப்பட்டது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள நகை கடையில் வெல்டிங் மிஷின் மூலமாக துளையிட்டு 9 கிலோ தங்க நகை கொள்ளை அடித்து சென்ற பெங்களூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் அருண் மற்றும் அவரது கூட்டாளிகள் என தெரிய வர, வடக்கு குற்ற பிரிவு போலீசார் பெங்களூர் கோலார் பகுதியில் முகாமிட்டு அங்கு பதுங்கி இருந்த அருணை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவரிடமிருந்து ரூ. 2 லட்சம் பணம், 4 லட்சம் மதிப்பிளான கார், கடை ஷட்டர் பூட்டை உடைக்க பயன்படுத்திய இரும்பு ராட் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்ட அருணை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வரும் நிலையில் அவர்களை கைது செய்தால்தான் மீதமுள்ள பணத்தை மீட்க முடியும் என தகவல் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அருண் மீது சென்னை, பெங்களூர் ஆகிய பகுதிகளில் 25 க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பேட்டி : *வீரவல்லவன், காவல் கண்கானிப்பாளர், புதுச்சேரி வடக்கு*