பட்டுக்கோட்டை, ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது நாடி அம்மன் திருக்கோயில் மேலும் அக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அக்கோயில் பட்டுக்கோட்டை மட்டுமல்லாமல் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கக்கூடிய திருக்கோயிலாகும்.
இந்நிலையில் நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றதாக பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் நேரடியாக வந்து புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொழுது அவர் கூறுகையில் பொய்யாக கணக்கு காட்டி பணத்தை நாடி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாகவும் அதன் படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதாக கூறினார். அவருடன் பல்வேறு ஆன்மீக அமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.