கும்பகோணம், அக். 27 –

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் இன்று, தொடங்கிய நிமிடத்திலேயே, ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் (திமுக) அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டதாக கூறி கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டதால், ஒரு தரப்பு திமுக மற்றும் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.

இக்கூட்டம் தொடர்பாக நாளை தஞ்சை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிடவும், முடிவு செய்துள்ளனர். இப்பிரச்சனையில், அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவரின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும், கொரோனா பேரிடர் தடுப்பு பணிகளில், கும்பகோணம் ஒன்றியத்தில் பெரிய அளவில் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி, வட்டார வளர்ச்சி அலுவலர் அறையை முற்றுகையிட்டு, கண்டன முழக்கங்களை எழுப்பியபடி, உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,  

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிக்குழுவின் சாதாரண கூட்டம், இன்று காலை 11 மணிக்கு என அறிவிக்கப்பட்டு இருந்தது, ஆனால்,  ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் (திமுக) காலை 10.50 மணிக்கே கூட்ட அரங்கிற்கு வந்து, திருக்குறளை வாசித்து விட்டு, இக்கூட்டத்தில் 59 தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டதாகவும், கூட்டம் நிறைவு பெற்றதாக கூறி, கூட்டத்தை முடித்து வைத்து விட்டு புறப்பட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவு பெற்ற நிலையில், அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏழு பேர், மற்றும் திமுகவை சேர்ந்த ஒரு பிரிவு உறுப்பினர்கள் ஏழு பேர் ஆகியோர் கூட்டத்திற்கு வரும் முன்னரே கூட்டம் முடிவுற்றது இதனால் அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்,  

 மேலும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் தற்பொழுது வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தினை போக்குவரத்து துறைக்கு தர இக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது, இதற்கு அதிமுக உறுப்பினர்கள் மற்றும் திமுக ஒருதரப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அது போலவே, கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக, ரூபாய் ஒரு கோடி வரை செலவிடப் பட்டுள்ளது இதில் பெரிய அளவில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளது இது குறித்தும் கேள்வி எழுப்ப இருந்த நிலையில், இந்த கூட்டம் அவசர அவசரமாக முடிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது  

 

 பேட்டி : 1. சசிகலா அறிவொளி (அதிமுக)

            ஒன்றியக்குழு உறுப்பினர் கும்பகோணம் ஒன்றியம்

 

  1. உள்ளுர் கணேசன் (திமுக) துணை தலைவர்,

            கும்பகோணம் ஒன்றியம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here