திருவாரூர், நவ. 23 –

‘மழையினால் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நடவு செய்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் மேலும் உடனடியாக சாலையமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காப்பணாமங்கலம் AMB எனும் குடியிருப்பு நகர் பகுதி உள்ளது. இங்கு சுமார் 50-க்கும்  மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகள் கட்டி சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 8 வருடங்களுக்கு மேலாக அந்த குடியிருப்பு பகுதிக்குள் சென்று வர சரியான சாலை வசதிகளை உள்ளூர் அரசு நிர்வாகத்தின் சார்பில் அமைத்து தரப்படவில்லையெனவும், மேலும் இப்பிரச்சினைக் குறித்து உள்ளூர் மற்றும் மாவட்ட அரசு நிர்வாகத்திடம் முறையாக எழுத்துப்பூர்வாகமாகவும் வாய் மொழி வாயிலாகவும் பலக்கட்டங்களாக புகார் மற்றும் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இது நாள்வரை சாலை அமைத்துத் தரவில்லை என அப்பகுதிவாழ் குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் அச்சாலைகளை கடக்க முடியாமல் மகளிர் மற்றும் குழந்தைகள் உட்பட வயோதியர்களும் பலதரப்பட்ட சிரமங்களுக்கு உள்ளாவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மழைக்காலங்களில் இப்பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்துக்கொண்டு அதில் பாம்பு உள்ளிட்ட விசப்பூச்சிகள் குடியிருப்புக்குள் புகுந்து, அச்சுருத்தி வருவதாகவும், மேலும் அச்சாலைகள் சேரும் சகதியுமாக இருப்பதாகவும் அதனால் பாதசாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களும் தடுமாறி கீழே விழுந்து உடல் காயங்கள் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனை சென்று வரும் அவலநிலை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக அப்பகுதி வாழ் குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து தங்கள் நியாமான அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்தித் தராமல் அலட்சியப்போக்கை கடைப்பிடித்து வரும் உள்ளூர் உள்ளாட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் உடனடியாக புதிய சாலை அமைத்துத் தர வலியுறுத்தியும் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் இணைந்து, தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

பேட்டிகள்:

  1. திலகவதி
  2. ஐஸ்வர்யா
  3. நீலாவதி
  4. அசோக்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here