சோழபுரம், மார்ச். 08 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவரான அருள்தாஸ்.சமையல் கலைஞருமாவர், மேலும்  இவருவருக்கு லாவண்யா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும்,1 ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் அருள்தாஸ்க்கு காலில் புண் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சோழவரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

மேலும் அம்மருத்துவமனை மருத்துவரான கமல்ராஜ் என்பவர் அவரை பரிசோதித்து அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார். அச்சிகிச்சையின் போது அருள்தாஸ்க்கு, மருத்துவர் ஓவர் டோஸாக ஊசி மற்றும் மாத்திரை வழங்கியதாகவும், அதனால் சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவமனையிலேயே அருள்தாஸ் சுருண்டு விழுந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், விழுந்தவரை உடனடியாக அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அவர்கள் கொண்டு சென்று அருள்தாஸை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து இறந்துப்போன அருள்தாஸ் உடலை காவல் துறையினரின் உதவியோடு உடல்க்கூறாய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும் இதுக்குறித்து சோழவரம் காவல் நிலையத்தில் அருள்தாஸின் உறவினர்கள் சார்பில் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் அப்புகார் அளித்து மூன்று நாட்கள் ஆன நிலையில் அப்புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதனைத்தொடர்ந்து தவறான சிகிச்சையால் இறந்துப்போனதாக புகார் தெரிவிக்கும் அருள்தாஸின் மனைவி மூன்று பிள்ளைகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 50 க்கும் மேற்பட்டோர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இறப்புக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களைபொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here