கும்பகோணம், பிப். 20 –
கும்பகோணத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டலம் 11ன் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த 11 லயன்ஸ் சங்கங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
கும்பகோணத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டலம் 11ன் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் மண்டலத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த மண்டல சந்திப்பில் மாவட்ட ஆளுநர் ராஜரத்தினம் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி துவக்கி வைத்தார். கௌரவ விருந்தினராக மதனகோபால் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற மாநிலங்கள் உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
திருச்சி சிவா பேசுகையில் ஒருவரை சந்திக்கிறோம் என்கிற போது நம்முடைய செயல் நம் பேச்சு நடவடிக்கைகள் அவர்கள் மனதை இடம் பெறுகிற அளவிற்கு அல்லது அவர்கள் பாராட்டுகின்ற அளவிற்கு அல்லது நாம் நேசிக்கின்ற அளவிற்கு நம் நடந்து கொள்ள வேண்டும்.
பேரறிஞர் அண்ணா சொல்வார் காத்திருப்பதற்கு பொறுமை வேண்டும், சகிப்புத்தன்மை வேண்டும், அப்போது தான் வெற்றி பெற முடியும் இளைஞர்கள் காத்திருந்து பொறுமையாக இருந்தால் அனைவருக்கும் பதவிகள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டு மாவட்ட தலைவர் கருணாநிதி மாவட்ட துணைத் தலைவர் சேதுகுமார் மாவட்ட முதல் துணை ஆளுநர் சுப்பிரமணியன் இரண்டாம் துணை ஆளுநர் இமயவரம்பன் கிரீன் டவுன் லயன்ஸ் சங்கம் தலைவர் செந்தில்குமார் இணைத் தலைவர் சதீஷ்குமார் காவிரி லயன்ஸ் சங்கம் செயலாளர் ரமேஷ் பொருளாளர் வாசு வட்டார தலைவர்கள் சீனிவாசன் செந்தில் ராஜா ரகுபதி வீரமணி மற்றும் அனைத்து லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இயற்கை பாதுகாப்போம் என்ற விருது வள்ளலார் லயன்ஸ் சங்கத்துக்கு சிறந்த கண் சிகிச்சைக்கான விருது திருநாகேஸ்வரம் லயன்ஸ் சங்கத்திற்கு சிறந்த குருதிக்கொடை விருது மகாமகம் லயன்ஸ் சங்கத்துக்கு தொடர் சேவை விருது காவிரி லயன்ஸ் சங்கத்திற்கு தொடர் அன்னதானம் விருது நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கத்திற்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த விருதுகள் 11 லயன்ஸ் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.