இராசிபுரம்,ஏப். 09 –

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திமுக., தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ஷியாம். கடந்த மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் ஷியாமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினர் K.R.N ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் ம.மதிவேந்தன், நகர செயலாளர் N.R சங்கர் ஆகியோர் ஷியாமின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

மருத்துவரான அமைச்சர்  மா.மதிவேந்தன் ஷியாமின் மருத்துவ அறிக்கையை பார்த்து அவருக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி விரைவில் நலம்பெற்று மீண்டு வர வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here