ராமநாதபுரம், ஆக. 14-ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துக்கள் மழை வேண்டி நடத்தும் முளைப் பாரி திரு விழாவில் பெண்கள் எடுத்து வரும் முளைப் பாரி ஊர்வலம் பள்ளி வாசல் வழியாக வரும் போது முஸ்லிம்கள் உற்சாக வரவேற்பு அளித்து வரும் நிகழ்ச்சி முஸ்லிம்கள், இந்துக்கள் சகோதரத் துவத்திற்கு எடுத்துக் காட்டான நிகழ்ச்சியாக உள்ளது. ராமநாதபுரம் புளிக்காரத் தெரு முத்துமாரி அம்மன் கோயில் முளைப் பாரி விழா ஆகஸ்ட் 4 ஆம் தேதி முத் தெடுத்து, ஆகஸ்ட் 6 ஆம் தேதி காப்பு கட்டுடன் முத்து பரப்பி விழா தொடங்கியது. இதனை யொட்டி ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை தினமும் இரவு இளையோர் ஒயிலாட்டம், மகளிர் கும்மியாட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்றிரவு அம்மன் கரகம் எடுத்து ஊர்வலமாக கோயில் வந்த டைந்தது. பின்னர் அம்மன் கரகத்துடன் முளைப் பாரி சுமந்து பெண்கள் கோயிலை மூன்று முறை சுற்றி வலம் வந்தனர். இதன் தொடர்ச் சியாக, அம்மன் கரகம் இன்று காலை பக்தர்கள் தரிசனத்திற்கு வீதியுலா சென்றது. இதனை யடுத்து
கோயில் வாசல் முன் பெண்கள் பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக் கிட்டு வழி பட்டனர். மாலையில் இளைஞர்கள் ஒயிலாட்டத்திற்கு பிறகு கோயில் நிர்வாகிகள் கவுரவிக்கப் பட்டனர். இதன் பின்னர் ராமநாதபுரம்
முத்து மாரியம்மன் கோயில் கமிட்டி தலைவர் அங்குச் சாமி (அதிமுக நகர் செயலாளர்) தலைமையில் கோயில் முன் வைத்த முளைப் பாரிகள் அம்மன் கரகத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.
ராமநாதபுரம் பாசி பட்டறை தெருவிற்கு முளைப்பாரி ஊர்வலம் வந்த போது முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் கென்னடி (எ) முகமது நிஷார், அகமது நயினார், சஸ்லான், ஹாஜி ஜபருல்லா உட்பட முஸ்லிம்கள் உற்சாக வர வேற்பளித்தனர். புளிக்காரத் தெரு அம்மன் கோயில் முளைப் பாரி விழாவில் இந்துக்களுக்கு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மத நல்லிணக்கம் அடிப்படையில் பாராட்டி மரியாதை செலுத்துவது தொன்று தொட்டு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முகப்பு சமுதாயப் பார்வை ராமநாதபுரம்: மத நல்லிணக்க முளைப்பாரி விழா, பள்ளிவாசல் அருகே முஸ்லீம்கள் உற்சாக வரவேற்பு