மயிலாடுதுறை, பிப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்…

சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோவிலில் வெகுவிமர்சையாக நடைபெற்ற ராதா கல்யாணம்,திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 9ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

இன்று காலை தென்பாதி விநாயகர் ஆலயத்தில் இருந்து திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களை மங்கல வாத்தியங்கள் முழங்க பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து ராதா, கிருஷ்ணன் சுவாமிகள் ஊஞ்சலில் எழுந்தருள பெண்கள் பால், பழம் கொடுத்து ஆரத்தி எடுத்து  சம்பிரதாய திவ்யநாமம் நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற ஆஞ்சநேயர் உற்சவத்தில் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றுகூடி  நடனத்துடன்  ராதா கல்யாண விழா கலை கட்டியது.

அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான ராதா கல்யாண உற்சவம் மங்கல வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள்  முழங்க விமர்சையாக நடைபெற்றது, பின்னர் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை கட்டப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here