சென்னை, நவ. 30 –

சென்னை புழல் பகுதியில் உள்ள ஜெயின் வித்யா ஆஷ்ரம் மேல்நிலைப்பள்ளி எனும் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணவன் கே. மனோஜ்குமார் என்ற மாணவன் பிரதம மந்திரியின் பரிக்சா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது கருத்துக்களை 500 க்கு மேற்பாட சொற்களைப் பயன் படுத்தி பகிர்ந்துக் கொண்ட மாணவனுக்கு பிரதம மந்திரி அலுவலகம் சார்பில் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்ட மடலை அம்மாணவனுக்கு அனுப்பிவுள்ளார்.

பிரதம மந்திரி அனுப்பிவுள்ள வாழ்த்து செய்தி மடலில் அம்மாணவனுக்கு தனது அன்பான நல்லாசிகளை வழங்குவதாகவும், மேலும் பரிக்சா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி தெரிவித்தும், மேலும் உங்களைப் போன்ற இளம் குடிமக்களின் எண்ணங்களைத் தெரிந்துக்கொள்வதும், புரிந்துக் கொள்வதும் எப்போதும் தமக்கு ஊக்கமளிப்பதாக தெரிவித்துவுள்ளார்.

தொடர்ந்து, இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆற்றல், தன்னபம்பிக்கை மற்றும் திறன்களைப் பார்க்கும் போது, தனக்கு மிகுந்த பெருமிதம் ஏற்படுகிறது. தேசத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகள் அவற்றின் இளைய சக்தியுடன் வலுவகா பிணைக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று இளைஞர்களுக்கு வரம்பற்ற வாய்ப்புகளும், சாத்தியக்கூறுகளும் உள்ளனயெனவும், மேலும், தகவல் தொழில் நுட்பம், சுகாதாரம், புதியகண்டுபிடிப்புகள், விளையாட்டு மற்றும் ஸ்டார்ட்அப்கள் என எந்தத்துறையைத் தேர்வு செய்தாலும் அவர்களின் வசதிகளுக்கும், வளங்களுக்கும் பஞ்சமில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கான அமிர்த காலமாகும் எனவும், புகழ்பெற்றவளர்ந்த மற்றும் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு தேசத்தை உருவதற்கானுறுதியுடன் முன்னேற வேண்டிய நேரம் இதுவென்றும், இந்த 25 ஆண்டுகள் உங்கள் கல்வி, தொழில், ஆளுமை மேம்பாடு, நற்பண்பு உருவாக்கம் ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான காலக்கட்டமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர், மேலும் உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தொடர்ந்து வடிவமைக்கும் போது,நாட்டின் எதிர்காலமும் ஒரு புதிய திசையை அடையும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இளையசக்தி அவர்களின் தனிப்பட்ட இலக்குகளை நாட்டின் முன்னேற்றத்துடன் இணைப்பதன் மூலம் தேசத்தை உயர் சிகரங்களுக்குக் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் என தான் நம்புவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்என்ற நம்பிக்கையுடன், உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துவதாகவும், பிரதமர் மோடி கே.மனோஜ்குமாருக்கு எழுதியுள்ள வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளார்.

பரீக்ஷா பே சர்ச்சா என்பது இளைஞர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘தேர்வு வாரியர்ஸ்’ என்ற பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு குழந்தையின் தனித்துவம் கொண்டாடப்படும், ஊக்குவிக்கப்படும் மற்றும் முழுமையாக வெளிப்படுத்த அனுமதிக்கப்படும் சூழலை வளர்ப்பதற்காக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தை ஒன்றிணைக்க பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளால் இயக்கப்படும் ஒரு இயக்கம் இது. அமைச்சர் நரேந்திர மோடியின் சிறந்த விற்பனையான புத்தகம் ‘தேர்வு வாரியர்ஸ்’. இந்தப் புத்தகத்தின் மூலம், கல்விக்கான புத்துணர்ச்சியூட்டும் அணுகுமுறையை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். மாணவர்களின் அறிவு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கு முதன்மை முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தேவையற்ற மனஅழுத்தம் மற்றும் அழுத்தத்தால் பரீட்சையை வாழ்வா சாவா என்ற நிலையாக மாற்றாமல், சரியான கண்ணோட்டத்தில் தேர்வுகளை வைக்குமாறு அனைவரையும் பிரதமர் கேட்டுக்கொள்கிறார்.

கற்றல் என்பது மகிழ்ச்சியான, நிறைவான மற்றும் முடிவில்லாத பயணமாக இருக்க வேண்டும் – இது பிரதமர் நரேந்திர மோடியின் புத்தகத்தின் செய்தி.

NaMo App இல் உள்ள Exam Warriors தொகுதியானது, Exam Warriors இயக்கத்தில் ஒரு ஊடாடும் தொழில்நுட்ப உறுப்பைச் சேர்க்கிறது. ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகத்தில் பிரதமர் எழுதியுள்ள ஒவ்வொரு மந்திரத்தின் முக்கிய செய்திகளையும் இது தெரிவிக்கிறது.

இந்த தொகுதி இளைஞர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும். தேர்வு வாரியர்ஸில் பிரதமர் எழுதிய மந்திரங்கள் மற்றும் கருத்துகளை அனைவரும் உள்வாங்க முடியும், ஏனெனில் ஒவ்வொரு மந்திரமும் படமாக குறிப்பிடப்படுகிறது. இந்த தொகுதியானது சிந்தனையைத் தூண்டும் ஆனால் சுவாரஸ்யமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, அவை நடைமுறை வழிமுறைகளின் மூலம் கருத்துக்களை உள்வாங்க உதவும் என அந்நிகழ்ச்சிக் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here