புதுச்சேரி, பிப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

புதுச்சேரி பிரதேச இலகுரக வணிக வாகன உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நான்காம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

விழாவிற்கு கூட்டமைப்பின் தலைவர் உத்தமன் தலைமை வகிக்க செயலாளர் ஜெகன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் அனைவரையும் வரவேற்க பொருளாளர் பாலாஜி தொடக்க உரை வாசித்தார்.

தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக முதலியார் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வழங்கினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் தலைமை குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். மணிகண்டன் பாலமுருகன் துணை பொருளாளர்கள் கருணாமூர்த்தி மற்றும் கோபி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here