ஆரணி, ஆக. 26 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மக்களுக்கு தேவையான முக்கியமான அடிப்படை வசதிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வாரியாக ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆரணி பேரூராட்சியில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் அனைத்துக் கட்சி நிர்வாகிகளிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார். அக்கூட்டத்தில் அனைத்து கட்சி பேரூராட்சி கவுன்சிலர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை கோரிக்கை மனுவாக அவரிடம் அளித்தனர். முன்னதாக இக்கூட்டத்திற்கு வந்த எம்.எல்.ஏ வுக்கு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி ஆளுயர மலர்மாலையை அவருக்கு அணிவித்து வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஆரணி பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் சுகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஹேமபூசனம். ஜி.பி. வெங்கடேசன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பிரபாவதி சுபாஷினி சந்தானலட்சுமி குணபூபதி.உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.
ஆரணியில் முக்கிய தேவைகளாகவும் குறைகளாகவும் இருந்து வரும் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், காய்கறி மார்க்கெட் விரிவாக்கம், மற்றும் குடிதண்ணீர் தேவைகளை முழுமையான அளவில் பூர்த்தி செய்தல் போன்ற முக்கியமாக எடுத்து பொதுமக்கள் இக்கூட்டத்தில் தெரிவித்தனர்.