புதுதில்லி, ஜன. 28 –

இந்திய ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடுதல் பணி நாசிக் ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும் தேவாஸ் வங்கி நோட்டு நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

  நவீனமயமாக்கல் நடவடிக்கைகளின் கீழ், ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும் பணியை, நாசிக்-ல் உள்ள ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும்  தேவாஸ் நகரில் உள்ள வங்கி  நோட்டு அச்சகத்தில்  இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய நிறுவனம் (எஸ்பிஎம்சிஐஎல்) தொடங்கியது. நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சகத்தில், புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும் பணியை  நிதியமைச்சகத்தின் சிறப்புச்  செயலாளர் திருமதி மீனா ஸ்வரூப் நேற்று ஜனவரி 27ம் தேதி தொடங்கி வைத்தார். தேவாஸ் நகரில்  உள்ள வங்கி  நோட்டு அச்சகத்தில், பொருளாதார விவகாரங்கள் துறை  ஆலோசகர் சசாங் சக்சேனா காணொலிக்  காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here