பொன்னேரி, ஆக. 03 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக குப்பை சேகரிக்கும் பேக்டரி வாகனங்கள் வழங்கும் விழா மன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவினை நகராட்சி மன்றத் தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமையேற்று நடத்த, நகராட்சி ஆணையர் கோபிநாத், மாமன்ற உறுப்பினர்கள் நல்லசிவம், உமாபதி, யாக்கோபு, திமுக நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில்,  பதினைந்தாவது நிதிக்குழு மானியம் 2022-2023 திட்டத்தின் கீழ்ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 9 பேட்டரி வாகனங்கள் மற்றும் 36 லட்சம் மதிப்பீட்டில் 5 இளகு ரக வாகனங்களும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி  பங்களிப்பு நிதி மற்றும் அரசு மானியம் 8 லட்சம் மதிப்பீட்டில் 4 பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 18 குப்பை சேகரிக்கும் வாகனங்களை வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக நகர் மன்ற தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன் வழங்கினார்,

தொடர்ந்து வாகன சோதனை ஓட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் அந்தோணி, கோபிநாத், உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், உள்ளிட்ட திரளான வியாபாரிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here