பொன்னேரி, ஏப். 29 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில், கொரோனாவால் உயிழந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதார மேம்பட நலத் திட்ட உதவிகளை அத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் வழங்கினார். நடப்பாண்டில் – 2022 பொன்னேரி தொகுதியில் இதுவரை கோவிட்-19 காரணமாக உயிரிழந்த  குடும்பங்களை சேர்ந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீஞ்சூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூராட்சித் தலைவர் ருக்மணிமோகன்ராஜ். துணை தலைவர் அலெக்சாண்டர். உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்குவதற்காக அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களான மாவு அரைக்கும் இயந்திரம், தையல் இயந்திரம் உட்பட பல்வேறு பொருட்கள் வரிசைப் படுத்தி வைக்கப் பட்டிருந்த போது …

 

இதில்  பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு மாவு அரைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரம், பள்ளிக் கட்டணம், பெட்டிக்கடை மற்றும் சிற்றுண்டி கடை வைத்தல், மீன் வலை வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு 32 ஆயிரம் முகக்கவசங்கள், 500 குடும்பத்தைச் சேர்ந்த நலிவுற்ற குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 800 பயனாளிகளுக்கு 20 லட்சம் மதிப்பீட்டில் வழங்கினார்.

இதில்  மீஞ்சூர் நகர காங்கிரஸ் தலைவர்  துரைவேல் பாண்டியன், காங்கிரஸ் நிர்வாகிகள் காட்டுப்பள்ளி சரவணன் .வினோத் .வில்சன். காமராஜ்  .மாவட்ட தி.மு.க மீனவர் அணி துணை அமைப்பாளர் தோணிரேவு ஏசுராஜன், மீஞ்சூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சுகுமார். அன்பரசு, ரவி தன்னார்வலர்கள் குருசாலமோன். வெங்கடேசன், அரவிந்த்,அங்கன்வாடி மேற்பார்வையாளர் சசிகலா. அங்கன்வாடி ஊழியர் ரமிலா உள்ளிட்ட திரளான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்  .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here