பொன்னேரி, டிச. 08 –

தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பெருத்தப் பாதிப்புகளை உருவாக்கியதால் அம்மாவட்ட பொதுமக்களின் இயல்புநிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது.

அதுப்போன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியிலும் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் காற்றின் சீற்றத்தால் அப்பகுதியில் வாழும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து, அங்கு வாழும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு, பெருத்த சிரமத்திற்கு உள்ளாகிவுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து முகாம், உணவு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நிவராணவுதவிகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதலாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அதனைத்தொடர்ந்து, அத்தொகுதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வருவதற்கான சீரமைப்பு பணிகளை விரைவுப்படுத்தும் விதமாக களத்தில் அத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தீவிர நடவடிக்கயை மேற் கொண்டு வருகின்றார்.

அதன் தொடர்ச்சியாக இன்று அவர் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும், மின்துண்டிப்பு ஏற்பட்டும்  குடிசைகள் விழுந்தும் மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தார். அதே போன்று மழை நின்று ஐந்து தினங்களாகியும் மின் இணைப்பு வழங்கப்படாத கிராமங்களான பொன்னேரி அடுத்த அகரம், பூங்குளம், பள்ளிபாளையம், செலியம்பேடு, ஆகிய ஆகிய கிராமங்களுக்கு சென்று மின்வாரிய அதிகாரியிடம் ஆலோசனை செய்து மின்சாரம் வழங்க ஆவணம் செய்தார், சின்னமாங்கோடு பெரிய மாங்கோடு கள்லூர் உப்பங்கழி ஓரத்தில் உள்ள கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளையும், காற்று மழையால் விழுந்த குடிசைகளை பார்வையிட்டு மக்களிடம் ஆறுதல் கூறி குறைகளை கேட்டறிந்தார்,

தொடர்ந்து, தேவம்பட்டு பணஞ்சாலை பகுதியில் தண்ணீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டு அதிகாரிகளிடம் கலந்த ஆலோசித்து மழைநீர் செல்லுவதற்கு ஆவணம் செய்தார்.

இந்நிகழ்வின் போது, மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்  அகரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா இளைஞர் அணி துணை அமைப்பாளர் முரளிதரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரி பொன்மலர் கிராம நிர்வாக அலுவலர் அஜீஸ், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here