திருவண்ணாமலை டிச.15-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தூசி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்ச விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். செய்யாறு டிஎஸ்பி செந்தில் உத்தரவின்  பேரில் செய்யாறு தூசி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன் பாஸ்கரன் சிலம்பரசன் ஆகியோர் கஞ்சா விற்பனை தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சின்ன ஏழச்சேரியில் சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த 21 என்பதும் கஞ்சா விற்பதும் தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். அதேபோல் செய்யாறு அடுத்த வடதண்டலம் அரசு கல்லூரி மைதானம், பைபாஸ் சாலை பேருந்துநிலையம் பின்புறம் வெங்கட்ராயன்பேட்டை ஆகிய பகுதிகளில் ஈடுபட்டபோது வடதண்டலத்தைச் சேர்ந்த வேடியப்பன் (20) கீழ்புதுப்பாக்கத்தை சேர்ந்த விகல் (23) கொடநகரை சேர்ந்த கோபி (22) கன்னியம் நகரைசேர்ந்த மணி (28) வெங்கட்ராயன்பேட்டை புள்ளிமான் ராஜா (எ) ராஜா (30) ஆகியோர் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை கிராமிய காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலை பகுதியிலும் செங்கம் சாலை சந்திப்பு அருகிலும் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்தவர்கள் காவல்துறையினரை கண்டதும் தாங்கள வைத்திருந்த பையை வீசிவிட்டு தப்பியோடினர். இதையடுத்து காவல்துறையினர பையை சோதனை செய்ததில் 600 கிராம் கஞ்சாபொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கஞ்சா பொட்டலங்களை அடிஅண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்த அரி(40) சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (40) என்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் துறையினர் வழக்குபதிவு செய்து தலைமறைவான இருவரை தேடிவருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here