கும்பகோணம், மே. 6 –

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் திருத்தேரோட்ட விழா நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு திருத்தேரின் வடம்பிடித்து இழுத்து இவ்விழாவினை தொடங்கி வைத்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக போற்றப்படும், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.

அதுப்போன்று இவ்வாண்டும் இவ்விழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நாள்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

கடந்த 2 ஆம் தேதி காலை தன்னைத்தானே பூஜித்தலும் இரவு பஞ்சமூர்த்திசுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான  9 ஆம் நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடனும், தேரில் எழுந்தருளினர். மங்கள வாத்தியங்கள் முழங்க தேரோட்டம்  நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழத்து வந்தனர். இந்த தேரோட்டத்தில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவின் 10 ஆம் நாளான நாளை காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. பின்னர் இரவு கொடிஇறக்கம் செய்யப்பட்டு,  சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்ப செல்ல உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here