கும்பகோணம், ஜன. 20 –

இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில், கும்பகோணம் காவல்துறைக்கு புதிதாக பொறுப்பேற்று இருக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை மனுவினை வழங்கினார்.

கும்பகோணம் மாநகரம், கோவில்கள் நிறைந்த பகுதியாகும். மேலும், இம் மாநகரத்தில் பல்வேறு பரிகாரத்தலங்களும் இங்கு அமைந்துள்ளது. மேலும், தினமும் இம் மாநகரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லக்கூடிய புனித இடமாகவும் இருந்து வருகிறது.

மேலும் இந்நகரம் முழுவதும், பல்வேறு முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அவ்வப்போது சரிவர இயங்காமல் பழுதடைந்தடைந்த நிலையில், அதனைத் தொடர்ந்து சரி செய்து வந்தாலும், சில நாட்கள்தான் அக்கேமராக்கள் இயங்குவதாகவும்,

மேலும், இக்கேமராக்கள் பல மாதங்கள் இயங்குவதைக் கிடையாது எனவும், அதற்கான சாதனங்கள் அனைத்தும் இருந்தும் கேமராக்கள் பழுதடைந்து வருவது தொடர்கதையாகி வருகிறதெனவும், மேலும், அதனால் குற்ற சம்பவங்களில் புலன் விசாரணை தாமதப்படுவதாகவும்,  தொடர்ந்து, மாநகரம் முழுவதும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,

இதனால் பொது மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுத்தியுள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா  பதிவுகளை ஆய்வு செய்யும் மாடர்ன் ரூமில் சுழற்சி முறையில் காவலர்களை நியமிக்க வேண்டும்‌.

நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து காவல்துறையினர் கூடுதலாக  நியமிக்க வேண்டும். பல்வேறு காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை நிலவிவருகிறதெனவும், அதனால் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் எனவும்,

மேலும், 11 காவல் நிலையங்களை உள்ளடக்கிய பகுதிக்கு அனைத்து மகளீர் காவல் நிலையம் கும்பகோணத்தில் தான் இயங்கி வருகிறது. அதிக அளவில் குடும்ப பிரச்சினை காரணமாக பல்வேறு புகார் மனுக்கள் விசாரணைக்கு வருகிறது.

காவலர் பற்றாக்குறையால் குற்றவாளிகளை தேடுதல், புகார் மனுக்கள் விசாரிக்கப்படுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஆதலால்‌ கூடுதலாக மகளிர் காவலர்களை நியமிக்க வேண்டும். தாலுகா காவல்நிலத்தில் ஆய்வாளர் நியமிக்கப்படாமல் உள்ளது. உடனடியாக ஆய்வாளர் நியமிக்கப்பட வேண்டும்‌.

அதுபோல் பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்கு ஆய்வாளர் இதுவரை நியமிக்கவில்லை தாலுகா காவல் நிலைய ஆய்வாளரே கூடுதலாக பார்த்து வருவதாகவும்,

அதுப்போன்று, பட்டீஸ்வரம் காவல் நிலையம் 12 தாய் கிராமங்கள்  30 குக்கிராமங்களை உள்ளடக்கி 42 கிராமங்களை கொண்ட காவல் நிலையம் ஆதலால் பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்கென்று தனி ஆய்வாளர் நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,

மேலும்,  தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோவில் யுனெஸ்கோ வால் அங்கீகரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அதனால், இக்கோயிலின் கலை நயத்தை காண உலக நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் தினம் வந்து செல்கிறார்கள் எனவும்,

இந்நிலையில் பக்தர்கள் முகம் சுழிக்கும் வகையில் இங்குள்ள பூங்காவில் காதலர்கள் என்ற போர்வையில் காதல் ஜோடிகள் அருவருக்க தக்க வகையில் எல்லை மீறுகின்ற சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறதெனவும், அதனால் அப்பகுதியில் அங்கு காவல் துறையினர் ரோந்து பணி செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். என்பதுப் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதிதாக பொறுப்பேற்று இருக்கும் காவல்துறை துணை  கண்காணிப்பாளர் மகேஷ்குமாரிடம்  இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா மாவட்ட அமைப்பாளர் அரவிந்த் மாவட்டச் செயலாளர் நவீன் ஆகியோர்  பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்கள்.

அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுவினைப் பெற்றுக்கொண்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அப்போது அவர்களிடம் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here