கும்பகோணம், ஏப். 16 –

கும்பகோணம் அருகேவுள்ள பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைப்பெற்றது இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பான முறையில் நடத்தினார்கள்.

கும்பகோணம் அருகே பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் ஆலய  55- ஆம் வருடம் சித்திரா பௌர்ணமி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதுசமயம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். மேலும், அதனைத்தொடர்ந்து 108 சிவாலயம் அருகில் குடமுருட்டி ஆற்றிலிருந்து புறப்பட்ட சக்தி கரகம், பால்குடம் அலகு காவடி புறப்பட்டு தெற்கு ராஜவீதி, மேலவீதி ,வடக்குவீதி கீழவீதி ஆகிய முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

தொடர்ந்து, மதியம் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது. மாலையில் அம்மன் வீதியுலா காட்சி முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்று வந்தடையும். விழாவில் கோவில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், பாபநாசம் பேரூராட்சி துணைத்தலைவர் பூபதி ராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், பிரேம்நாத் பைரன், மற்றும் சித்ரா பவுர்ணமி விழா குழுவினர்களும்,திரளான பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here