இஸ்லாமாபாத்:

கடந்த 2008-ம் ஆண்டு, மும்பையில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது, ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத்-உத்-தவா பயங்கரவாத இயக்கம் ஆகும். புலவாமா தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் நிர்ப்பந்தம் அளித்து வருகின்றன. எனவே, ஜமாத்- உத்-தவாவுக்கும், அதன் அறக்கட்டளையான பலா-இ- இன்சானியாத் பவுண்டேசனுக்கும் பாகிஸ்தான் அரசு நேற்று தடை விதித்தது.

பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here