செங்கல்பட்டு, மார்ச். 12 –

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர உணவகத்தில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் XXX அகில இந்திய கட்டுநர்கள் மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாட்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது. இரண்டாவது நாள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்டுமான துறையில் விரிவான வளர்ச்சி, மற்றும் செலவுகளை குறைத்தல் மேலும் பொருளாதாரத்தை அடைவதற்கான வழிகளில் கவனம் செலுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.

முன்னதாக கட்டுமானர்கள் சங்கத்தின் சார்பில்  முதலமைச்சருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அவர், கடந்த திமுக ஆட்சி காலத்தில் அகில இந்திய கட்டுமான சங்கத்திற்கு கரிகாலன் விருது வழங்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருப்பதாகவும், அதன்பின் நடந்த ஆட்சி மாற்றத்தில் விருது வழங்கப்படாமல் இருந்து வந்ததாகும், தற்போது மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த நிலையில் நிச்சயமாக இந்த சங்கத்திற்கு கரிகாலன் விருது வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த ஆட்சியில் சொன்னதை செய்வோம், சொல்வதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என பேசினார்.

மேலும் கட்டுநர்கள் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவர்கள் மத்திய மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள் எனவும், கட்டுமான நிறுவனங்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றுபவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எனவும் நானும் அதே போல் செயல்படுவேன் என உறுதியளித்தார். கொரோனா காலத்திற்கு பிறகு கட்டுமான தொழில் மீளவில்லை என்றும், அகில இந்திய கட்டுனர்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான ஒப்பந்ததாரர்களுக்கு 1-ல் பணவரவு 10-முதல் 25-கோடி ரூபாயாகவும், சால்விங் சதவீதத்தை 30-ல் இருந்து 15- சதவீதமாக குறைக்க உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அகில இந்திய கட்டுமானர்கள் சங்கம் ஏழை எளியோருக்கு வீடு கட்ட உதவிட வேண்டும் எனவும், அரசிற்கு கட்டப்படும் கட்டிடங்களை தரமானதாக கட்டவேண்டும் எனவும், அரசிற்கு தூண் போல் துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய முதல்வர், இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி, அந்த உணர்வோடு தான் ஆட்சி நடந்து வருவதாக தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here