திருநாகேஸ்வரம், மே. 21 –

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ரூபாய் 2 லட்சத்தி 10 ஆயிரம் மதிப்பிலான வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது.  அப்போது பிரதமர் மோடி படத்தை வைக்கவில்லை என்று பாஜகவினர் முற்றுகை இட்டதால் பரபரப்பு நிலவியது.

திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில், பேரூராட்சி பகுதியில் உள்ள 14 பயனாளிகளுக்கு, ரூபாய் 29 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பிலான ஆணைகளை பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன் தலைமையிலும், தஞ்சை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் கனராஜ், மற்றும் பேரூராட்சி துனை தலைவர் உதயா உப்பிலி ஆகியோர் முன்னிலை வகிக்க, இதில், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

இவ்விழாவில், பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில், மறைந்த முதல்வர் மு கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புகைப்படங்கள் இடம் பெற்ற போதும் மத்திய அரசின் முழுமையான நிதியுதவில் நடைபெறும் இத்திட்டத்தில் தொடர்புடைய பிரதமர் மோடியின் படமோ, பெயரோ இடம் பெறவில்லை என்பதனை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் நிகழ்ச்சி முடித்து, பேரூராட்சி நுழைவு வாயில் அருகே வரும் போது, அவரை எதிர்த்தும், அவரை கண்டிக்கும் வகையிலும், கருப்பு கொடி ஏந்தி, பாஜக திருநாகேஸ்வரம் பேரூர் தலைவர் உப்பிலிராஜ் தலைமையில், ஒன்றிய தலைவர் கிருஷ்ணாபுரம் சரவணன், ஒன்றிய மகளிரணி தலைவர் வேம்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

இதனையடுத்து நிகழ்ச்சிக்கு வந்த திமுகவினரும், பாஜகவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது தகவலறிந்த  திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் தலைமையில் திருநீலக்குடி காவல்துறையினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here