திருவாரூர், மார்ச். 30 –

ஓ.என்.ஜி.சி. சார்பில் நடப்பாண்டில் பத்தாவது முறையாக திருவாரூர் மாவட்டம் வேலங்குடியில் ஒன்றியப் பெருந்தலைவர் புலிவலம் தேவா தலைமையில் இலவச மருத்துவமுகாம் நடைப்பெற்றது. அம்மருத்துவ முகாமினை மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு தொடங்கி வைத்தார்.

காரைக்கால் ஓ.என்.ஜி. சி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் வேலங்குடியில் இலவச மருத்துவ முகாம் நேற்று 29.03.2023 அன்று காலை பத்து மணி முதல் மாலை மூன்று மணி வரை நடைப்பெற்றது.

இம்மருத்துவ முகாமில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகியோருடன் “முதியோர்களுக்கான முதியோர்” தொண்டு நிறுவனம் ஏற்பாட்டில், பொதுநல மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

மேலும் இம்முகாமிற்கு ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் புலிவலம் தேவா, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்றுவரும் சமூக நலத் திட்டங்களைப் பாராட்டிப் பேசினார். தலையாமங்கலம் பாலு, கிராமப்புரத்துப் பொது மக்களுக்கும் தரமான மருத்துவ உதவி கிடைப்பதற்காகத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டதோடு, அவற்றுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் நடைமுறைப்படுத்தி வரும் “மாதம் ஒரு மருத்துவ முகாம்” பணியை வெகுவாகப் பாராட்டினார்.  மேலும் அப்போது அவர் ஓஎன்ஜிசி-யின் திட்டங்களை வாழ்த்திப் பேசினார்.

மேலும் இம்முகாமில் பொது மக்கள் பெரிய அளவில் கலந்து கொண்டு இது போன்ற முகாம்களை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றும் அப்போது அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அவரைத்தொடர்ந்து இம்முகாமில் உரைநிகழ்த்திய ஓஎன்ஜிசி குழுமப் பொது மேலாளர் மாறன், நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் எந்த அளவிற்கு சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வண்ணமும், மாநில அரசின் சமூக நலத்திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் வண்ணமும் செயல்படுத்தப்படுகின்றன என்று பட்டியலிட்டார்.

மேலும் நடப்பு நிதி ஆண்டில் மட்டும் மத்தியகுடி, குத்தாலம், அலிவலம், தீபாம்பாள்புரம், திருப்புலாணி, கரையான்காடு, கொத்தங்குடி, பழையபாளையம், நல்லூர் மற்றும் வேலங்குடி பகுதிகளில் பத்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் அப்போது தெரிவித்தார்.

மேலும் இந்த முகாம்களில்  சுமார் 24 லட்சம் செலவில் 3455 பேருக்கு மேல் மருத்துவ சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டு 1456 பேருக்கு மூக்குக் கண்ணாடிகளும் 121 முதியவர்களுக்கு கைத்தடிகளும் வழங்கப்பட்டுள்ளன என்கிற விவரங்களுக்கு தலையாமங்கலம் பாலு பாராட்டுத் தெரிவித்ததோடு ஓஎன்ஜிசி நிறுவனம் தொடர்ந்து இது போன்ற சமூக நலத் திட்டங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மருத்துவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். ,  .

இன்றைய நிகழ்வில் மட்டும் 342 பேர் கலந்து கொண்டு தம்மைப் பரிசோதித்துக் கொண்டனர். 145 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதோடு வயோதிகர்கள் 20 பேருக்குக் கைத்தடிகளும் வழங்கப்பட்டதை அனைவரும் பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் தவுலத் இக்பால், பெருங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மேரிசுகுணாவதி பிரபு, வேலங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமி வெங்கடேஷ் ஆகியோரும் ஓஎன்ஜிசி முதன்மைப் பொது மேலாளர், சரவணன், முதன்மை மருத்துவ அதிகாரி கணேஷ் குமார், அதிகாரிகள் வேணுகோபால், விஜய் கண்ணன், சி எஸ் ஆர் ஒருங்கிணைப்பாளர்கள் முருகானந்தம், கார்த்திகேயன் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை முருகானந்தம் ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளைச் சிறப்புற செய்திருந்த “முதியோர்களுக்கான முதியோர்” தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் இளங்கோ நன்றி தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here