ஆவடி, ஏப். 20 –
சென்னை பெருநகரை அடுத்துள்ள ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்திரவின்படி அச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல் பட்டு வந்த மூன்று பேர்கள் இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், அதன் படி, எம்.5 எண்ணூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை தண்டையார்பேட்டை சேரன் நகர் 1 வது தெரு வீட்டு எண் 32 – 16 ல் வசித்து வரும் சானதுல்லா மகன் 23 வயதுடைய நசரதுல்லா, மேலும் அதேக் காவல் நிலையத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 127 வது பிளாக் வீட்டு எண் 1 ல் வசித்து வரும் சிராஜ் என்பவரின் மகன் 23 வயதுடைய முகமது முஜித் என்கின்ற நபர்களும், மேலும், டி-2 பூவிருந்தமல்லி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை மதுரவாயல் வடக்குமாட வீதி வீட்டு எண் 19 ல் வசித்து வரும் ராமர் என்பவரின் மகன் 27 வயதான கலைச்செல்வன் என்கின்ற கலை ஆகிய மூன்று பேரும் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு இடையூராக செயல்பட்டு வந்ததாலும் மேலும் பொது அமைதியை காத்திடும் நோக்கோடு ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்திரவின் படி அவர்கள் மூன்று பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வாண்டில் மட்டும் இச்சட்டத்தின் படி இதோடு 104 பேர்கள் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது என்பது மேலும் குறிப்பிடத் தக்கதாகும்.