ஆரணி, மே. 09 –
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரணி பகுதியில், திருவள்ளூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் கிளை சார்பில், உலக ரெட் கிராஸ் தினம் இன்று இப்பகுதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மேலும், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கிளைத் தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தார். மேலும், மருத்துவ முகாமை பொன்னேரி சார் ஆட்சியர் செல்வி ஐஸ்வரியா மற்றும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேலும் ஆரணி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, டாக்டர் நாராயணபாபு, டாக்டர் ப்ரொபோஸர் முனியப்பன், மற்றும் ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு நலிவடைந்த ஏழை எளியவர் 20 பேர்க்கு நலத்திட்ட உதவிகளையும், மேலும், பேரூராட்சி துப்புரவு பணியாளர் 50 பேர்களுக்கு, கையுறை. வழங்கப்பட்டது. மேலும் இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் பொன்னேரி வட்டக்கிளை நிர்வாகிள் மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கர். பேரூராட்சி துணைத் தலைவர் சுகுமார். வார்டு உறுப்பினர்கள் கண்ணதாசன். குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும்உள்ளாட்சி பிரதிநிதிகள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.
மேலும் நிகழ்ச்சியின் நிறைவில் பொன்னேரி வட்ட கிளை செயலாளர் சித்ரா சுரிந்தர் இந்நிகழ்விற்கு வருகை தந்து இவ்விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.