சுவாமிமலை, ஏப். 04 –
கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக திகழுவது சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கோவிலாகும்.
மேலும், இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், என்ற விசேஷங்கள் கூடியதும் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்திற்கு பொருள் கூறி உபதேசம் செய்த தலமாகவும், நக்கீரனால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதர் திருப்புகழில் வியந்து பாடித் துதித்த சிறப்பு பெற்றதும், மேலும் வேண்டுவோர் வேண்டியதை அருளும் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவிலாகும்.
மேலும், இச்சிறப்புமிக்க இத்திருத்தலத்தில் இன்று பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை ஸ்ரீ வள்ளி தேவ சேனை, சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து, காவிரி ஆற்றில் எழுந்தருள, காவிரி ஆற்றில் நடுவில் அஸ்திரதேவருக்கு பால் தயிர் திரவிய பொடி மா பொடி மஞ்சள் பொடி சந்தனம் உள்ளிட்ட பொருட்கள் அபிஷேகம் செய்த பிறகு மகா தீபார்தனை நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு வெள்ளி ரதத்தில் திருவீதி உலா மற்றும் நாட்டிய குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 6-ந் தேதி வியாழக்கிழமை இரவு அனுகை விக்னேஸ்வர பூஜை நிகழ்ச்சியும், மறுநாள் 7-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீ சண்முக பெருமாள், ஸ்ரீ வேடமூர்த்தி, வள்ளிநாயகி ஸ்ரீ நாரதர், ஸ்ரீ நம்பிராஜன், நந்த மோகினி சத்தமாக உற்சவ மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வள்ளிநாயகி திருவலஞ்சுழி கோவிலில் தினைபுனை கட்சியாக செலுத்துதல் ஸ்ரீ வேடமூர்த்தி திருவீதி வலம் வந்து திருவலஞ்சுழி திருக்கோவிலுக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், இரவு திணை புனை காட்சி திருவலஞ்சுழி திருக்கோயில் வேலவேட விருந்த வேங்கை மரக்காட்சிகள் கொடுத்தல் நிகழ்ச்சியும், மறுநாள் 8-ந் தேதி சனிக்கிழமை அதிகாலை அரசலாற்றில் யானை விரட்டுதல் நிகழ்ச்சி, திருக்கோயில் எழுந்து எழுந்தருளல், அதனைத் தொடர்ந்து அளவந்திபுரம் நடுத்தெருவில் இருந்து சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், ஸ்ரீ சண்முக பெருமாள் ஸ்ரீ வள்ளிநாயகியார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 9, 10, ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சியும், மறுநாள் 11ஆம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், ஸ்ரீ வள்ளி தேவசேனை, ஸ்ரீ சண்முக சுவாமி புறப்படுதல், ஸ்ரீ வேடமூர்த்தி, ஸ்ரீ வள்ளிநாயகியார், பல்லக்கில் திருவீதியுலா கட்சியும், நிறைவாக 12ஆம் தேதி காலை ஸ்ரீ சண்முக பெருமாளுக்கு 108 சங்காபிஷேகம் அலங்கார தீபாரதனையும் இரவு வெள்ளி ரதத்தில் ஸ்ரீ சுவாமி திருவீதியுலா நடைபெற்று யாதா ஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி, மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், உபயோதாரர்கள், சிறப்பாக செய்து வருகின்றனர்.