திருவாரூர், ஏப். 04 –

திமுக சார்பில் முப்பெரும் விழா இன்று திருவாரூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவாரூர் நகர் பகுதிகளில் சாரட் குதிரை வண்டியில் உதயநிதி ஸ்டாலினை அமர வைத்து சாரட் வண்டியை திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் ஓட்டி வந்தார்.

வரும் வழியெல்லாம் உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்பு அளித்தனர். இறுதியாக கலைஞர் அரங்கத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நண்பர் நன்னன் நூற்றாண்டு விழா, ஆயிரம் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மறைந்த மாவட்ட அவை தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்தமல்லி சோமசுந்தரம் படத்திறப்பு விழா என திருவாரூர் மாவட்ட திமுகவினர் சார்பில் நடைப்பெற்ற முப்பெரும் விழாவில் அவர் பங்கேற்றார்.

தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை நிகழ்த்தும் போது ..

திருவாரூர் டெல்டா மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் முதலமைச்சரே இந்த டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் எனவும், இப்போது அமைச்சராக உள்ள நானும் டெல்டா மாவட்டத்துக்காரன் தான் எனவும்,

மேலும் இம்மாவட்டத்திற்கு தொடர்ந்து முதல்வர், அமைச்சர்களைத் தொடர்ந்து  நானும் வந்துகொண்டேதான் இருக்கின்றேன் எனவும்,

மேலும் கலைஞர் பெயரில் ஒரு அறக்கட்டளை உள்ளது. அதிலிருந்து மாதம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம்  மருத்துவ செலவிற்கு வழங்கபட்டு வருகிறது. எனவும்,  மேலும் அவ் அறக்கட்டளை மூலமாக இதுவரை ரூ 6 கோடி வரை திமுக கட்சியின் முன்னோடிகளுக்கு  வழங்கப்பட்டுள்ளது. என்றார்.

மேலும் இதில் இளைஞரணி சார்பில் கடந்த 3 மாதங்களில் மட்டும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு ரூ. 60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. எனவும், மேலும், கடந்த ஒன்றரை வருடங்களில் 25 மாவட்டங்களில் ரூ.26 கோடி மருத்துவ உதவிக்காக வழங்கப்பட்டுள்ளது எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும், அண்மையில் இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடத்தப்பட்டது. அதில் திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி பற்றி பேசினோம். கட்சியின் மூத்த முன்னோடிகள் தான் திராவிட இயக்க வரலாறு என அப்போது அவர் குறிப்பிட்டார்.

மேலும் இக்கூட்டத்தில் எனக்கு சின்னவர் என புனைப்பெயர் கொடுத்து அழைத்தனர். எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது. ஆனால் இந்த மேடையில் இருப்பவர்களில் நான் சின்னவன் என்பதால் சின்னவர் எனும் புனைப்பெயர் பொருந்துகிறது.எனத்தெரிவித்தார்.

மேலும், கட்சியின் மூத்த முன்னோடிகளை பார்க்கும் போது, கட்சிக்காக அவர்கள் ஆற்றிய உழைப்பு, தியாகம், தொண்டு என தொடர்ந்து பங்காற்றி வரும் விதங்களை பார்க்கும்போது தமக்கு  பெருமையாகவும்,  பொறாமையாகவும் இருக்கிறது எனவும், மேலும் இங்கிருக்கும் முன்னோடிகள் அனைவருமே எனக்கு அண்ணா, கலைஞரின் மறு உருவமாக தெரிகின்றனர். என அப்போது உதயநிதி குறிப்பிட்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவர்களும் மற்றும் திமுகவின் மாவட்டம், ஒன்றிய, நகர, கிளைக்கழக, வார்டு நிர்வாகிகள் பொறுப்பாளர்கள்  மற்றும் ஏனைய அணி நிர்வாகிகளும், திரளான அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் அப்பகுதிவாழ் பொதுமக்கள் என திரளானவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here