திருவாரூர், செப். 17 –

இந்தியா முழுவதும் இன்று பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை பாஜக வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதுப்போன்று தமிழ்நாட்டிலும் அக்கட்சியின் சார்பில் மாநில மற்றும் மாவட்ட மற்றும் ஊரக நிர்வாகத்தின் சார்பிலும் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் அக்ட்சியினர் சார்பில் நடைப்பெற்ற பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடும் வகுயில் இரத்ததான முகாம், 72 தென்னங்கன்றுகள், மூன்று சக்கர கைவண்டி மற்றும் காசோலைகள் வழங்கல் போன்ற பல்வேறு தொண்டு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள கோவில் களில் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், இரத்ததானம் , நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் உள்ள  பாஜக அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி பிரிவு சார்பாக  இன்று மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக கடைவீதியில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் தலைமையில் மாநில விவசாய அணி செயலாளர் கோவி.சந்துரு ஒன்றிய தலைவர் காளி.அய்யப்பன் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி  நிர்வாகிகள் உறுப்பினர்கள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

இதே போல் திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தலைமையில் மூன்று சக்கர கைவண்டி, பாரதப் பிரதமரின் 72 ஆவது பிறந்தநாளில் 72  தென்னங்கன்றுகள் வழங்கியும், மருத்துவ உதவியாக ஒருவருக்கு  பத்தாயிரம் ரூபாய்கான காசோலை  மற்றும் பொதுமக்களுக்கு  இனிப்புகள் கொடுத்தும் பட்டாசு வெடித்தும் வெகு விமர்சையாக பிறந்த நாளை கொண்டாடினார்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் ரவி கல்வியாளர் பிரிவு தலைவர் செயலாளர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here