திருவாரூர், மே. 13 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் கோசாலை உள்ளது. இங்கு நாட்டுப் பசுக்கள், உம்பளச்சேரி வகை பசுக்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வகை நாட்டு பசுக்கள், முதியவர்கள் மற்றும் வளர்க்க முடியாதவர்களால் வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோசாலையில் பசுக்களை பாதுகாக்கும் விதமாக பாதுகாப்பு கட்டிடம் கட்டப்பட்டு. அதன் ‘திறப்பு விழா’ நடைபெற்றது.. பசு பாதுகாப்பு கட்டிடத்தை திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ‘பசுக்கள் தெய்வீகத் தன்மை கொண்டவை என்றும், பசுவை பேணிக்காப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பெற்றோரை பேணி காப்பது போல பசுவை பாதுகாத்தால் குடும்பங்கள் மேன்மேலும் வளரும் என்று அருளாசி வழங்கினார்.
இந்த நிகழ்வினை கோரக்ஷண ஸமிதி சார்பாக கோசாலையின் நிர்வாகி குருபிரசாத் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.






















