காஞ்சிபுரம், ஆக. 22 –

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சின்ன காஞ்சிபுரத்தில், விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா எதிர் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு கோவில், பொது இடம் மற்றும் வீடுகளிலும் விநாயகர் சிலையினை வைத்து வழிபாடு நடத்தும் வகையில், சின்ன காஞ்சிபுரம், அய்யன் பேட்டை உள்ளிட்ட பகுதி களில், 1 அடி உயரம் முதல், 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி படு தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து விநாயகர் சிலை தயாரிப்பாளர் திவாகரன் கூறியதாவது: ஏழு ஆண்டுகளாக விநாயகர் சிலை தயாரித்து வருகிறேன். கொரோனா ஊரடங்கால் கடந்த இரு ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் தயார் செய்ய வில்லை. நடப்பு ஆண்டில் சிலைகள் செய்ய கடந்த இரு வாரங்களுக்கு முன்தான் அரசு அனுமதி வழங்கியது. ஒரு அடி விநாயகர் சிலை 500 ரூபாய், 7 அடி உயர சிலை 13 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here