கும்பகோணம், ஜன. 23 –
கும்பகோணம் வட்டார லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்யக்கோரிய மனுவினை கிழக்கு காவல் நிலையத்தில் வழங்கினார்கள்.
ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்யக்கோரி கும்பகோணம் வட்டார லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் தலைவர் சாமிநாதன் தலைமையில் கிழக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் அழகேசனிடம் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது அச்சங்கத்தின் செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் கலியமூர்த்தி, துணைத்தலைவர் முத்துக்குமரவேல், துணைச்செயலாளர் ராஜசேகரன், ரவி, செந்தில் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட் அச்சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாமிநாதன் இக்கோரிக்கை மனுக்குறித்து, தெரிவிக்கும்போது, தற்போது தமிழகத்தில், லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதங்கள் விதிப்பது அதிகரித்து வருகிறது. முறையாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறிப்பிட்டு காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், என்ன குற்றம் என்று தெரிவிக்காமல், பொதுவான குற்றம் என அபராதம் விதிக்கின்றனர்.
ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கும், தமிழகத்தில் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. எனவே. இதுப்போன்று ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் முறையை உடனடடியாக ரத்து செய்ய வேண்டும். என்பதை வலியுறுத்தி பலமுறைகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். என்று அப்போது தெரிவித்தார்.