கும்பகோணம், ஜன. 23 –

கும்பகோணம் அருகே உள்ள முத்தய்யபிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்துள்ள துணிவு எனும் திரைப்படத்திற்கு சென்ற அவரது பெற்றோர்கள் அம்மாணவியையும் அழைத்துச் செல்லாததால், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். மேலும் அச்சம்பவம் அப்பகுதிவாசிகளிடம் பெரும் பரபரப்பு மற்றும் அதிர்ச்சி மேலும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாச்சியார் கோவில் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட முத்தய்யபிள்ளை மண்டபம் மெயின் சாலைப்பகுதியில் சுரேஷ் என்பவர் தனது மனைவி விஜய்சித்ரா மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

மேலும், சுரேஷ் திருப்பனந்தாள் பேரூராட்சி மன்ற உறுப்பினராகவும் தற்போது இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள துணிவு எனும் திரைப்படத்திற்கு குடும்பத்துடன் செல்வதாக இருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அவர்களது இரண்டாவது மகளுக்கு, திங்கட்கிழமையான இன்று தேர்வு உள்ளதென்பதால் அவரை வீட்டில் விட்டு சுரேஷ் மற்றும் மனைவி மூத்தமகள் ஆகிய மூவர் மட்டும் அத் திரைப்படத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், திரைப்படம் பார்த்து விட்டு வீடு திரும்பியவர்கள் வீட்டின் கதவை வெகு நேரமாக தட்டி கதவைத் திறக்க சொல்லி இரண்டாவது மகளை அழைத்த போதும், கதவு வெகு நேரமாக திறக்கப்படவில்லை, என்பதையறிந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டில் உள்ள அறையில், ப்ளஸ் டூ படிக்கும் அவர்களது இரண்டாவது மகள் தூக்கில் தொங்கியப் படி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக மகளை காப்பாற்றும் நோக்கில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாச்சியார் கோவில் நிலைய காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காவல்துறை விசாரணையில் மேற் தெரிவித்தவாறு அக்குடும்பத்தினர் அவர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து நாச்சியார்கோவில் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதி குடியிருப்புவாசிகளிடம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், மேலும் தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here