மீஞ்சூர், ஜூலை. 17 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடபட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில், தேசிய அனல் மின் கழகத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது.

அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி ராஜாஜி நகர் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நந்தியம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் தலைமை வகித்தார். ராஜாஜி நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் ராஜா, பொருளாளர் விஸ்வநாதன், செயலாளர் சௌரிராஜன், முன்னாள் தலைமை ஆசிரியர் பாஸ்கர் ரெட்டியார், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்து பங்கேற்ற மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி அப்புதிய சிமெண்ட சாலையை மக்களின் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீஞ்சூர் ஒன்றியத்தின் தலைவராக பொறுப்பேற்ற ரவி கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை செயல் படுத்திவுள்ளார் எனவும், மேலும் கடந்த 30 வருட காலமாக இப்பகுதியில் மண்சாலையாக இருந்த சாலையை, புதிய சிமெண்ட் சாலையாக தற்போது அவர் அமைத்துக்கொடுத்துள்ளார் என அவருக்கு புகழாரம் சூட்டினார்கள்.

மேலும் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு, 60 பள்ளிக்கட்டிடங்களை அமைத்து தந்துள்ளார் எனவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். மேலும் அதற்காக அவருக்கு நங்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் அவருடன் பணிபுரியும் கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதில் கருணாகரன்,வழக்கறிஞர் சுப்பிரமணி .நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன், அன்பு, சந்தானம், ஆதிகேசவன், அன்பு, சாகுல் பாய், யாகூப், தனசேகர், முனுசாமி, ஹரிஹரன், சாக்ரட்டிஸ், சந்திரசேகர், சந்தோஷ் உள்ளிட்ட திரளான சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here