மன்னார்குடி, மார்ச். 29 –
மன்னார்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவிக்கும் போது, ஓபிஎஸ் தரப்பினர் எத்தனை மேல் முறையீடுகள் செய்தாலும் அனைத்திலும் நாங்கள் வெற்றிப்பெறுவோம் என தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்தேர்வை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று அவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதனைத்தொடர்ந்து, நேற்று தமிழக முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அதனை கொண்டாடினார்கள்.
அதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக சார்பில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் கட்சி தொண்டர்களுடன் பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று வெடி வெடித்து கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது, மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு எதிர்காலம் மிக சிறப்பாக அமைய வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பம், அந்த விருப்பம் தீர்ப்பாக வந்துள்ளது. அதிமுக நூறாண்டு காலம் வாழும் வளரும் என்பதற்கு இத்தீர்ப்பு ஒரு அட்சரமாக விளங்குகிறது. எனவும் அதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வாகியுள்ளார். எனவும்,
மேலும் அதிமுக திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தொண்டர்களின் சார்பில் வாழ்த்துக்களை மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். எனவும், மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியெனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும், ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதைத் தவிர வேறு எண்ணம் கிடையாது. அவர்களிடம் தொண்டர்கள் கிடையாது, நிர்வாகிகள் கிடையாது. எத்தனை மேல் முறையீடுகளை அவர்கள் செய்தாலும் எது முறையோ, எது சரியோ அதற்கு தான் தீர்ப்பு நிச்சயம் கிடைக்குமெனவும்,
மேலும் அவர்கள் தொடுக்கும் அனைத்து மேல்முறையீடுகளிலும் தாங்கள் எல்லா காலங்களிலும் வெற்றி பெறுவோம் என அப்போது அவர் தெரிவித்தார்.