கும்பகோணம், அக். 4 –

கும்பகோணத்தில் நேற்று திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன் எதற்காக கருத்தரங்கம் மற்றும் கற்போம் பெரியாரியம் ஆர் எஸ் எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா நடைபெற்றது இதில் திராவிட கழக தலைவர் வீரமணி கலந்துகொண்டு நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மதிமுக மாவட்ட செயலாளர் முருகன், இந்திய முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஷாஜகான், தீண்டாமை ஒழிப்பு மாநில செயலாளர் சின்னை பாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, நிலப்புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மே 17 இயக்கம் தலைவர் திரு முருகன் காந்தி, திராவிட கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகர், மாவட்ட தலைவர் நிம்மதி உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கருந்தரங்கில் பேசிய திராவிட கழக தலைவர் ஆசிரியர் வீரமணி பேசுகையில்

நீட் தேர்வு அரசியல் சட்டத்திற்கு விரோதமாக மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் திணிக்கப்பட்ட தேர்வு. டாக்டர் எஸ் எஸ் ராஜன் குழுவினர் அதைப் பற்றி தெளிவாக கூறியுள்ளது போல், நீட் தேர்வு அரசியல் சட்டத்தின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. மேலும் நீட் தேர்வின் நோக்கம் ஏழை எளியவர்களை காப்பாற்றுவது அல்ல. முழுக்க முழுக்க வசதி படைத்தவர்கள் பிள்ளைகள் டாக்டர்களின் பிள்ளைகள் தொடர்ந்து டாக்டராக வருவதற்கும், பாரம்பரியமாக படித்துக் கொண்டிருப்பவர்கள் டாக்டராக வருவதற்கும் ஏற்ற வகையில் இந்த நீட்தேர்வு உள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்கள் மருத்துவ படிப்பில் நுழைய முடியாதவாறு நீட் தேர்வு இருந்து வருகிறது. இதனால் இந்த நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விலக்குவதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் இரண்டு மசோதாக்களை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளார். இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். எனவும்,

நாடாளுமன்ற நிலைக்குழுவில் மத்திய அரசு கூறியதை போல் எந்த மாநில அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறதோ அதற்கு விலக்கு அளிக்கலாம் என கூறியதை தமிழகத்திற்கு நிறைவேற்றி தரவேண்டும். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது முதல் ஆண்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதும் ஜிப்மர் மற்றும் ஏழை மருத்துவ மாணவர்களுக்கு இந்த விதி பொருந்தாது என கூறியுள்ளனர்.

இந்தியா முழுவதும் ஒரே நிலை இருக்க வாய்ப்பில்லை. நாடு முழுவதும் பாடத்திட்டங்கள் வேறுபடுகின்றன. இதையெல்லாம் தாண்டி ஊழல்களை ஒழிப்பதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என மத்திய அரசு கூறியதற்கு மாற்றாக தற்போது நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மற்றும் பல லட்சம் ரூபாய் கொடுத்து நீட் வினாத்தாள் பெறப்பட்டுள்ளது.

பாடத்திட்டங்களில் குளறுபடி போன்ற மோசடிகள் நடைபெற்றுள்ளன. எனவே தமிழக அரசைப் பொருத்தவரை சட்டபூர்வமாக ஒரு கமிட்டியின் பரிந்துரையை ஏற்று 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுவரை நீட் தேர்வினால் 18 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக நீட் தேர்வை எதிர்த்து  பிரச்சார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியார் திடலில் இதுகுறித்து பல்வேறு கட்சித் தலைவர்களை அழைத்து பேசிய போது பஞ்சாயத்து தேர்தல்கள் முடிவடைந்த பின் தமிழகம் முழுவதும் இந்த பிரச்சார இயக்கத்தை நடத்தி நீட் தேர்வு எதிரான கருத்தை வலியுறுத்துவது என அனைத்து கட்சி நிர்வாகிகளும் உறுதியளித்துள்ளனர். இதற்கான பணியை திராவிடர்கழகம் தொடரும்.

தற்போது இந்த பிரச்சார இயக்கத்தை திராவிட கழகம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து பல்வேறு கட்சி நிர்வாகிகள் இணைந்து பஞ்சாயத்து தேர்தல் முடிவடைந்த பின் மாபெரும் இயக்கமாக நடத்த திராவிட கழகம் தொடர்ந்து அதற்கான பணிகளை செய்து வருகிறது.

நீட் தேர்வு தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக விலக்கப்படும் வரை இந்த பிரச்சார இயக்கம் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் திராவிட கட்சி சார்பில் மேற்கொள்ளப்படும். போராட்டத்தை மக்கள் மீது திணிக்காமல் மக்களுடைய உணர்வுகளை புரிந்து மத்திய அரசு செயல்பட வேண்டும். என இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here