பொன்னேரி, ஜன. 24 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயிலின் முன்பு கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு பணி நிரந்திரம் செய்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு தங்கள் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றம் கூறி அதனை உணர்த்திடும் வகையில் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கௌரவ விரிவுரையாளர்கள் தங்களின் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் அவர்கள் அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசாணை -56ஐ உடனடியாக அமுல்படுத்த வேண்டும், (யு.ஜி.சி) -நிர்ணயித்த ஊதியத்தினை உடனடியாக வழங்கிட வேண்டும்,
கௌரவ விரிவுரையாளர்களின் பணிப் பாதுகாப்பினை உறுதி செய்திடல் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்றிட வேண்டும் என இந்த ஆர்பாட்டத்தின் வாயிலாக அவர்கள் முழக்கங்கள எழுப்பி அரசின் கவனத்திற்கு செல்லும் வகையில் வலியுறுத்தினார்கள். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.






















