ராமநாதபுரம், செப். 20

ராமநாதபுரம் நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ., பள்ளி விளையாட்டு விழா நடைப் பெற்றது . பள்ளி தாளாளர் டாக்டர் செய்யதா தலைமை வகித்தார். நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜமுத்து முன்னிலை வகித்தார். நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார். போட்டிகளில் வென்ற மழலையருக்கு இந்திய கடற்படை ஐ.என்.எஸ். பருந்து கமாண்டன்ட் ஷினோத் குமார் பரிசு வழங்கினார். மழலையரின் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி  நடந்தது. குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்வி ஆலோசகர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here