இராசிபுரம், ஜூன். 23 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வருகிற 3ம் தேதி நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேட்டில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இதுதொடர்பாக நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றியம், பேரூர் வாரியாக திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி இன்று காலை, 10 மணிக்கு, ராசிபுரம் நகர திமுக., சார்பில், சேலம் சாலையில் உள்ள லயன்ஸ் கிளப்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. ராசிபுரம் நகர கழக செயலாளர் NR.சங்கர் தலைமை வகித்தார்.

செயற்குழு கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக., பொறுப்பாளர் KRN.இராஜேஸ்குமார் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்துக் கொண்டு ராசிபுரம் நகராட்சி வார்டு திமுக., உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தினர்.

இதில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வருகிற 3ம் தேதி நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேட்டில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துக்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில், ராசிபுரம் நகரத் தலைவர் கவிதா சங்கர், முன்னாள் எம்.பி.PR.சுந்தரம், முன்னாள் MC.,பாலு மற்றும் 100க்கும் மேற்பட்ட திமுக.,வினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here