தஞ்சாவூர், ஏப். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

 

முயற்சி எடுக்க வேண்டும், முடிவு பன்னி பார்க்க வேண்டும். மக்கள் எல்லாம ஒன்னு சேர்த்து மைக் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என தஞ்சையிலும் பாட்டு பாடி வாக்கு சேகரித்தார் சீமான்

தஞ்சை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹுமாயூன் கபீரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சை அண்ணா சிலை அருகில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், மலையை பார்த்தால் காசு பணம் துட்டு என பார்க்கிறார்கள். நாம் மலையை தாயாக பார்க்கிறோம் என்றார். காங்கிரஸ் பாஜக இரு கட்சிகளும் இந்த நாட்டிற்கு என்ன நன்மை செய்து இருக்கிறது என சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார் சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முன் உரிமை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

காவிரியில் தண்ணீர் பெற முடியவில்லை. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது என்று சொன்னவனுக்கு ஓட்டு கேட்கிறார் என முதல்வரை சாடினார்.

கல்வி உரிமையை பறித்து சென்றது காங்கிரஸ். விட்டு கொடுத்தது திமுக என குற்றம் சாட்டினார். சீமான் பேசிக் கொண்டு இருந்த போது, அந்த சாலையில் ஆம்புலன்ஸ் சென்றபோது பேச்சை சற்று நேரம் நிறுத்தினார்

பா.ஜ.க வுக்கு சாதி, மதம் இரு கண்கள். சாதி, மதமா தாய் மொழியா என பார்த்து வாக்களியுங்கள் என கூடியிருந்த கூட்டத்தினரை  கேட்டுக் கொண்டார். முயற்சி எடுக்க வேண்டும் முடிவு பன்னி பார்க்க வேண்டும். மக்கள். எல்லாம் ஒன்னு சேர்த்து மைக் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என பாட்டு பாடி வாக்கு கேட்டார் சீமான்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here