புதுச்சேரி, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி பாரதி பூங்கா நுழை வாயிலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வந்த உணவு சார்ந்த பொருட்களை நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்து அனுமதிப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினசரி வருகை புரிவது வழக்கம் அதிலும் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரை அருகேவுள்ள பாரதி பூங்காவில் உள்ள மரங்களின் நிழலில் பொழுது கழிப்பது தொடர்ந்து கோடைக் காலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பாரதி பூங்காவில் உணவு சாப்பிடுபதற்கும், உள்ளே எடுத்துச் செல்லவும் திடீரென தடை விதித்துள்ளது. மேலும் பூங்காவின் நுழைவாயிலில் நகராட்சி ஊழியர் உணவு பொருட்கள் உள்ளாதா என சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். அதனால் அம்மாநில பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.