கும்பகோணம், ஆக. 26 –

கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட வண்ணாங்கண்ணி பகுதியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வசித்து வரும்  செந்தில்குமார் மகன் 17 வயதுடைய கார்த்திக், 23 வயதுடைய மகள் காயத்ரி அவரது சகோதரரின் மகள் 15 வயதிலான திவ்யா ஆகிய மூவருக்கும் கடந்த நான்கு நாட்களாக கடுமையான காய்ச்சல் வந்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, அவர்களை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவர்கள் மூவருக்கும் சிகிச்சை அளித்த போது மஞ்சள் காமாலை இருப்பதை அம் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டறிந்தனர் மேலும் அந்நோயின் தாக்கம் அதிகமாகவுள்ளதாக தெரிவித்து மேல் சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சைக்காக அவர்களை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு அங்கு அவர்கள் மூவரும்தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக அவர்களுக்கு அளித்த மருத்துவ பரிசோதனையில் மஞ்சக்காமலை நோயிற்கான காரணம் அவர்கள் குடிப்பதற்காக பயன்பண்டுத்திய குடிநீரின்  மூலமாக தொற்று ஏற்பட்டு மூவரும் மஞ்சள் காமாலை நோயால் கடும் பாதிப்படைந்துள்ளனர். என தெரிய வந்தது

இந்நிலையில் கார்த்திக் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட மூவரும் தங்கள் வீட்டில் வந்த குடிநீரை குடித்ததால்தான் அவர்கள் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகிவுள்ளனர் என அதுக் குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் அவரது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து  அப்பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இம்முகாமில் பரிசோதனையில் மேலும் 2 குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்திருப்பது மேலும் தெரிய வந்துள்ளது அதனைத்தொடர்ந்து மேலும் 3பேர்களுக்கு உடல்நிலை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பாதிப்பின் எண்ணிக்கை தொடருமோ என்ற அச்சத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே குடிநீர் சம்மந்தமான பிரச்சினையால் ஏற்படும் தீவிரத்தை உடனடியாக அறிந்து, கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வலுவான மருத்துவ முகாமினை அமைத்து அப்பகுதியில் வசிக்க கூடிய குழந்தைகள் முதல் முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளித்திடவும், தொடர்ந்து சுத்திகரிப்பு செய்யபட்ட குடிநீரை வழங்கி மேலும் தொற்றுப் பரவாமல் இருப்பதற்கும் நோய் தடுப்பு நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என அப்பகுதி வாழ் மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தஞ்சையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் கார்த்திக் மாணவி திவ்யா மற்றும் காயத்ரி ஆகியோரின் சிகிச்சைக்கு உரிய உதவி செய்திட தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொண்டனர்.

மேலும் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும்  மாநகராட்சி ஆணையரை நேரடியாக சந்தித்து மனுக்கள் வழங்கினார்கள்.

மேலும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலமேகம், மனோகரன், ஜெயபால், உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என தலைமை மருத்துவரை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here