கும்பகோணம், ஏப். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…

கும்பகோணம் ஸ்ரீ தாழமுத்து மாரியம்மன் ஆலயத்தின் 43 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் 200 க்கும் மேற்பட்டோர் பால்குடம், காவடி எடுத்து வந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பழைய பாலக்கரை அருகில் உள்ள கல்யாணராமய்யர் பேட்டையில் எழந்தருளிருக்கும் ஸ்ரீ தாழமுத்து மாரியம்மன் ஆலயத்தின் 43 ஆம் ஆண்டு சித்திரை பெளர்ணமி திருவிழா இன்று நடைப்பெற்றது அதனை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கி தினமும் அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

அவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடந்த 21 ஆம் தேதி குத்துவிளக்கு பூஜை, மற்றும் பூச்செறிதல் விழாவும் நடைபெற்றது. மேலும் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை பெளர்ணமியை முன்னிட்டு  வேல், அக்னி கொப்பரை, பால்குடம், காவடி, அலகு காவடி, யானை கட்டி தொங்குதல், காவிரி ஆற்றிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து ஆலயம் வந்தடைந்தது.

தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  நாளை மஞ்சள் நீராட்டு விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான சித்திரை பெளர்ணமி திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏசி முருகன், சித்திரவேல் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here