தஞ்சாவூர், மே. 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

“பிளாஸ்மா பெர்சிஸ்” என்ற நவீன சிகிச்சை முறையால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் “எலி பேஸ்ட் எனப்படும் எலி கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை பெருமளவில் உயிர் காக்க முடிவதாக மருத்துவர்கள் தகவல்.

எலிக்கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயன்ற 14 வயது சிறுமிக்கு  தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு நவீன சிகிச்சை முறையான “பிளாஸ்மா பெரிசிஸ்” என மேம்படுத்தப்பட்ட சிகிச்சை  முறையால் சிறுமியின் உயிர் காக்கப்பட்டது.

இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் கிரிட்டிக்கல் கேர் மெடிசின் பிரிவு தலைவர் டாக்டர் செந்தில்குமார்..

பல்வேறு காரணங்களால் தற்கொலை முயற்சியாக எலிக் கொல்லி மருந்தை உண்பவர்கள் பெரும்பாலும் உயிர் பிழைப்பது அரிதாக இருந்த நிலையில், தற்பொழுது பிளாஸ்மா பிரிசிஸ் என்ற நவீன சிகிச்சை முறையால் இறப்பு   எண்ணிக்கை குறைந்துள்ளது.  என்றும்,  எலிக்கொல்லி மருந்தில் உள்ள “மஞ்சள் பாஸ்பரஸ்” சயனைடு ஆபத்தான தாகும்..

இத்தகைய விஷத்தை உண்பவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பிறகுதான் பாதிப்பு வெளியே தெரியவரும், அதன் பிறகு சிகிச்சை அளிக்கும் போது உயிரிழப்பை தடுப்பது சவாலாக உள்ளது.. ஆரம்ப நிலையில் பிளாஷ்மா பிரிசிஸ் சிகிச்சை முறையில் இரத்த கூறுகளை இரத்த ஓட்டத்தில் இருந்து அகற்றும் ,  உடலுக்கு வெளியே செய்யப்படும் மருத்துவ முறை சிகிச்சையில் ,   இரத்தத்தில் உள்ள நீர் சுத்திகரிக்கப்பட்டு,  உடல் உறுப்பு பாதிப்பில் இருந்து காக்க முடியும், இத்தகைய சிகிச்சை முறையால் டெல்டா மாவட்டங்களில் எலி கொல்லி மருந்து உண்டவர்களின் உயிர் பிழைக்கும் சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.

அரசு மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை சிறப்பாக அளிக்கப் படுவதாகவும் தெரிவித்தவர். கால தாமதமின்றி சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டால் உயிர் பிழைப்பது உறுதி செய்யப்படும் என்றார்.

 

பேட்டி..

டாக்டர்.செந்தில் குமார்

கிரிட்டிகல் கேர் மெடிசின் பிரிவுத் தலைவர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here