கும்மிடிப்பூண்டி, பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே வட்டார மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொள்கை விளக்கம் மற்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தெருமுனை கூட்டம் நகர தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் வழக்கறிஞர் சம்பத்,வட்டார தலைவர்கள் சசிகுமார், டி.என்.பாபு, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு பேச்சாளர்கள் மாவட்ட தலைவர்கள் ஓ.பி.சி. அணி பெனின், மகிலா காங்கிரஸ் ஜோதி சுதாகர், மாநில பேச்சாளர் அம்பேத்கர் நடராஜன், சிறுபான்மை பிரிவு குதரத்அலி உள்ளிட்டவர்களுடன், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் துரை சந்திரசேகர் அவ்விழாவில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
அத்தெருமுனைக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய துரை சந்திர சேகர் பாஜக ஒன்றிய அரசின் அவலங்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் செய்து கொடுத்த பல்வேறு நலத்திட்டங்களையும் வரிசைப் படுத்தி பேசினார்.
தொடர்ந்து அவர் சிறுபான்மை மக்களுக்கு என்றும் உறுதுனையாக செயல்பட்டு வருவதில், இந்திய அளவில் காங்கிரசும், தமிழகத்தில் திமுக திராவிட மாடல் அரசும்தான் என பொதுமக்களிடையே விளக்கமாக பேசினார்.
அச்சிறப்புமிகு தெருமுனைக் கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பழவை காந்தி, பாலாஜி, புருஷோத்தமன், நந்தா, ஜெயசீலன், மணிகண்டன், அப்புன், அரவிந்தன், ஜெய்சங்கர், உமாபதி ராஜு, தேவம்பட்டு சுரேஷ், உள்ளிட்டவர்களும் திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனத் திரளானவர்கள் பங்கேற்றனர்.